ஞாயிறு, 20 மார்ச், 2022

எயினர் தலைவன் இமவான் தரிசனம்..

சிவசமய உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்..
சுமார் 100 கோடி மதிப்பீட்டில்(தோராயம்) சந்திரகுல தலைநகரான கூடல் நகராம் கடம்பவனம் மதுரையில் அமையவுள்ள "இமவான் திருக்கோவில்" அறக்கட்டளை தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து பதிவுகளாக சேமித்து வருவது இத்தளத்தின் முதன்மை நோக்கமாகும்,

அதன்படி இதுவே முதல் கட்டுரை..

இமவான் திருக்கோவில் வளாகமானது அமையவுள்ள விவரங்கள்;

1.பிரம்மான்டமான இமவான் சிலை கோவில் வளாக மையத்தில் உள்ளபடியும் தேவ கணங்கள் சூழ திருமால் அண்ணனாக நின்று மலையரையன் மகள் மலைமகளை கயிலை மலையன் சிவனுக்கு மணம் செய்து வைக்கும்  சிற்பங்களுடனான சிலைகள் உள்ளபடி அமைய உள்ள மூலவரான அச்சிலையின் சுற்றுவட்டாரத்தில் 63 நாயன்மார்களுக்கும் பிரம்மான்ட மன்டப வடிவிலான அவர்கள் முழு வரலாற்றை சேக்கிழார் பாடலுடன் கூறும் வகையில் சன்னதிகள் அமைப்பது..

2.இமவான் திருக்கோவில் வளாகத்தில் மொத்தம் 16 திருமண & இந்து மத விழாக்களுக்கான மன்டபங்கள் இந்து மதத்தை சேர்ந்த பொதுமக்களின் 100% இலவச பயன்பாட்டிற்கும் அனைத்து விதமான இந்துமத விழாக்களின் இலவச பயன்பாட்டிற்கும் கட்டப்பட உள்ளது,

3.இமவான் திருக்கோவில் வளாகத்தில் அமைய உள்ள 16 இலவச மகால் விவரங்கள்,
👇👇
3;1 கோடை(கொடைக்கானல்) மலையன் கடியநெடு வேட்டுவன் பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,

3;2 கண்ணன்_பலராமன் பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,
(மகாலில் வைணவ ஆழ்வார்கள் அனைவரின் சிலையும் அமைய உள்ளது)

3;3 தானவ மன்னன் மயாசுரன் பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,
(மகாலில் தானவ மன்னர்கள் ஹிரன்யகசிபு,பிரகலாதன்,
மாவலி,வாணாதிராயன் முதல் இராவனேஸ்வரன் வரை அசுர மன்னர்கள் பலரின் சிலை அமைய உள்ளது)

3;4 தேவர் தலைவன் தேவேந்திரன் பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,

3;5 சமயக்குரவர் நால்வர் பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,

3;6 சேக்கிழார் பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,

3;7 சிலம்புச்செல்வி கண்ணகி பிரம்மான்ட சிலை முகப்பில் உள்ளதுடன் மகால்,

3.8 வஉ.சிதம்பரனார் மகால்,
3.9.தேவர் மகால்,(முத்துராமலிங்கத் தேவர் & மூக்கையா தேவர் சிலைுடன்)
3.10.பெருந்தலைவர் காமராஜர் மகால்,
3.11.பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மகால்,
3.12.அயோத்திதாச பண்டிதர் மகால், 
3.13.வெண்ணி காலாடி மகால்,
3.14.எஸ்_எஸ்_ராமசாமி படையாச்சியார் மகால்,

இவற்றுடன்,
இமவான் திருக்கோவில் வளாக முகப்பில் ஒருபக்கம்,

3;8 சிவாலயம் காத்த விடுதலை வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் வரலாற்றை முழுவதுமாக விவரங்களுடன் கூறும்படியும் பிரம்மான்ட சிலையுடனும் உள்ள மனிமன்டபமுடன் மருதுபாண்டியர் மகால்,

&
முகப்பில் மற்றொரு பக்கம்

3;9 அருள்மொழி அரசு 64 வது நாயனார் கிருபானந்த வாரியார் பிரம்மான்ட சிலையுடன் கூடிய மனிமன்டபமுடன் வாரியார் மகால்,

ஆகியவை அமைய உள்ளது..

4.தொல்காப்பியர் நூலக வளாகம்,

ஆகியன அமைய உள்ளன,
***

இங்கனமாக "இமவான் திருக்கோவில்" அறக்கட்டளை பணிகள் துவங்கியவுடன் மேற்குறிப்பிட்ட அனைத்து கட்டுமான மாதிரிகளுடைய வடிவ சிற்பங்கங்களுடனும் & 63 நாயன்மார் சிற்பங்களுடனும் ரதயாத்திரை வாகனம் இந்தியாவில் உள்ள 274 தேவார வைப்புத்தளங்களுக்கும் பயணிக்க உள்ளது,

ரத யாத்திரை டெல்டா மண்டலம்  "இடும்பாசுரன் வனத்தில்" துவங்கி கயிலை வரை சென்று கடம்பவனத்தில் "இமவான் திருக்கோவில்" அமைய உள்ள இடத்தை வந்தடையும்,

இந்து சமய பொது மக்களுக்கு இத்திருக்கோவில் அமைய உள்ள விவரங்களை தெரிவித்து விளம்பரபடுத்தும் நோக்கில் இவை செய்யப்பட உள்ளது...

5.
இமவான் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள "சிவானந்த குருகுலம்" போன்ற மலைமகள் காப்பகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது..

6.
"இமவான் திருக்கோவில் அறக்கட்டளை" சார்பாக கோவில் அமைய உள்ள இடத்திற்கு அருகாமையில் இந்து மதத்தை சேர்ந்த ஏழை,எளிய மானவர்களின் பயன்பாட்டிற்காக தங்கும் வசதியுடனும் உணவு வசதியுடன் கூடிய 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான 100% இலவச கல்வி நிலையம் அமைய உள்ளது..

"மேற்கல்வி" மையங்கள் அமைப்பது தொடர்பாக அறங்காவலர்கள் அனைவருடனும் ஆலோசித்து எதிர்காலத்தில் முடிவுகள் எடுக்கப்படும்..

இத்திருக்கோவில் அறங்காவலர்களாக இந்து மதத்தில் பல்வேறு சமுதாய உறவுகள் வழிகாட்டிகளாக, தலைவர்களாக கௌரவிக்க உள்ளனர் அவர்கள் விவரம்,

6;1 கொங்கு நாடு "வேட்டுவ" கவுண்டர் சமுதாயத்தார்,

6;2 குருவம்சம் அகமுடையார் சமுதாயத்தார்,

6;3 யதுகுலம் "யாதவர்" சமுதாயத்தார்,

6;4 நவவீரர் வம்சம் "செங்குந்த" முதலியார் சமுதாயத்தார்,

6;5 சிலம்புச்செல்வி கண்ணகி வம்சம் "செட்டியார்" சமுதாயத்தார்,

6;6 
திருநீலகண்ட நாயனார் குடும்பம்
"குயவர்" சமுதாயத்தார்,

6;7 
திருக்குறிப்பு தொண்டர் நாயனார் குடும்பம்
"வண்ணார்" சமுதாயத்தார்,

6;8 தானவ மன்னன் மயாசுரன் வம்சம் ஐந்தொழில் "கம்மாளர்" சமுதாயத்தார்,

6;9 தெய்வத்தாய் இசைஞானியார் நாயனார் குடும்பத்தவர்களான ஆதிசைவர் எனப்படும் "சிவாச்சாரியார்" சமுதாயத்தார்..

6;10 திருவண்ணாமலை தீபம் ஏற்றும் உரிமையுடைய "மீனவ நாட்டார்" சமுதாயத்தார்,

தலைவர்களாக மேற்குறிப்பிட்ட 10 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அறக்கட்டளை வழிகாட்டிகளாக இருக்க மேலும் செயலாளர் & பொருளாளர் செயல்பட உள்ளனர்....

7
இத்திருப்பணிகளுக்கான அனைத்து விவரங்களையும் எளிமையாக அனைவரும் அறிந்துகொள்ளும்படி "ஆன்ட்ராய்டு" அல்லது "வெப்" அப்ளிகேசன்(APP) விரைவில் வெளியிடப்பட உள்ளது...

மேலதிக விவரங்கள் அனைத்தும் இத்தளத்தின் அடுத்தடுத்த கட்டுரைகளில் தெரியப்படுத்தப்படும்...

வாழ்க சிவமதம்,
வளர்க இந்துக்கள் ஒற்றுமை..
சிவாய நம..!

*******

உலகமாதா மலைமகளை பெற்ற மலையரையன் எனப்படும் இமவான் சிலை உள்ள தமிழகத்தின் ஒரே கோவிலான மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் தரிசன படங்களை இக்கட்டுரையில் முழுவதுமாக இனி காண்போம்...


@ இமவான் திருக்கோவில் அறக்கட்டளை,
செயலாளர்,
VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335